பிரசவத்திற்கு பின் வீடு திரும்ப முடியாமல் தவித்த பெண்ணை தூக்கி சென்ற ராணுவ வீரர்கள்..!
காஷ்மீரில் பெய்து வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. விமானம், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுமையான பனி பெய்து வருகிறது.
இதனால் விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தாமதம் ஆகிவிட்டது. பனி சாலைகளிலும் கிடைப்பதால் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கடும் பனியால் பிரசவத்திற்கு பின் வீடு திரும்ப முடியாமல் தவித்த பெண்ணை ஆறு கிலோமீட்டர் ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கியபடி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்.







