31 முறை பரிசோதித்த போதும் கொரொனா தொற்று உள்ளதாகவே முடிவு..!
ராஜஸ்தானின் பாரக்பூரில் ஒரு பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி இதுவரை 31 முறை பரிசோதித்த போதும் கொரொனா தொற்று உள்ளதாகவே முடிவு வந்துள்ளது.
பாரக்பூரைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு முதன்முறையாக ஆகஸ்ட் 24ஆம் நாள் சோதனை செய்தபோது கொரொனா தொற்று உருவாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின்னர் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்ட போதும் கொரொனா தொற்று உள்ளதாகவும் முடிவு வந்துள்ளது. 14 முறை விரைவு சோதனையும், 17 முறை ஆண்டிஜன் சோதனையும் செய்தும் அத்தனை முறையும் கொரொனா உள்ளதாகவே தெரியவந்துள்ளது.
மனநலமும், நோய் எதிர்ப்பாற்றல் குன்றிய அந்த பெண்ணை ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைத்து தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.







