பிரதமர் மோடி வெளியிட்ட நினைவு நாணயம்..! ஆவேசமாக பேசிய மம்தா பானர்ஜி..!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மேற்கு வாங்க மாநிலம் கொல்கத்தாவின் கலை நிகழ்ச்சியுடன் விழா கொண்டாடப்பட்டது.
நேதாஜியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக கொல்கத்தா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொல்கத்தா விக்டோரியா நினைவு அரங்கத்தில் நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
சுபாஷ் சந்திரபோஸ் 125வது பிறந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நேதாஜி நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இதனிடைய பிரதமர் மோடி முன்னிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசம் அடைந்து பேசினார். தன்னுடன் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு முடிவெடுத்து விட்டதாக குற்றம்சாட்டினார் .
அரசு நிகழ்ச்சியில் கண்ணியம் இருக்கவேண்டும் என்று கூறியவர் ஒருவரை அழைத்து விட்டு அவரை புண்படுத்துவது நல்லதல்ல என்றார் . இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் எதனையும் பேச போவதில்லை என கூறினார். பிரதமர் முன்னிலையில் முதலமைச்சர் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.







