முழு ஊரடங்கு நேரத்திலும் வாகன சோதனையில் ஈடுபட்ட இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர்!
தமிழகம் முழுவதும் இம்மாதம் 4 ஞாயிறு கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்தபடி இன்று கடைகள் மற்றும் வணிக வளாகம் உணவகங்கள் என அனைத்துமே அடைக்கப்பட்டன.
இதனால் மக்கள் அனைவரும் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காது. என தெரிந்ததால் மக்கள் அனைவரும் இன்றைய தினம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை நேற்றைய தினமே சேகரித்து விட்டனர் மேலும் பால், மருந்து கடைகள், மருத்துவமனை போன்றவற்றிற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இராமநாதபுரத்தில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது இருப்பினும் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றியுள்ளவர்களை எச்சரித்தும் அறிவுரை வழங்கியும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர்.







