--- --:--:-- --

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த பொழுது நடந்த அதிர்ச்சி..!

3

புதாபியில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் நடு வானில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து மஸ்கட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

 

அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல்லியை நோக்கி இண்டிகோ நிறுவனத்தின் சிக்ஸ் சி1406 விமானம் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த பொழுது கடும் அதிர்வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு விமானிகள் கண்டறிந்தனர்.

 

இதனால் விமானிகள் ஓமன் நாட்டின் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுவிட்டதையடுத்து இண்டிகோ விமான மஸ்கட்டில் தரை இறக்கப்பட்டது.

 

பயணிகள் அனைவரும் மஸ்கட்டில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மாற்று விமான ஏற்பாடுகளை இண்டிகோ நிறுவனம் செய்து வருகிறது. விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் நடவடிக்கைகளில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

Right Menu Icon