இன்று முதல் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடக்கம்..!
கொரோனா நிவாரண தொகையில் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
கொரொனா பாதிப்பு நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் கொரொனா காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தவிர்க்க முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் நாளொன்றுக்கு டோக்கன் மூலம் 200 அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.






