--- --:--:-- --

கொரொனா தொற்றால் இரு செவிலியர்கள் உயிரிழப்பு..!

6

கொரொனா தொற்று ஏற்பட்ட செவிலியர் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த இந்திரா என்ற செவிலி சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருதய துறையில் பணிபுரிந்து வந்தார்.

 

இவருக்கு கடந்த மாதம் தொற்று ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துள்ளார். அதை போல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த பிரேமா என்பவருக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பெற்றுவந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இருவரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு சங்கத்தினர் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon