ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும் – திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
நிர்வாகத்திறனற்ற த.வெ.க. அரசின் தோல்விகளை மறைக்கவும், நாளை தொடங்கவுள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பதைத் தடுக்கவுமே, காவல்துறையைக் கொண்டு அவரை அரசு அராஜகமாகக் உதயநிதி ஸ்டாலின் கைது செய்து செய்யப்பட்டுளளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார் .
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில்,” நாடு தழுவிய எதிர்ப்பு மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, த.வெ.க. அரசின் பாசிச நடவடிக்கைக்கு பலத்த அடி விழுந்துள்ளது. ஆட்சிக்கு வந்தது முதல் விமர்சிப்பவர்களையும், போராடுபவர்களையும் கைது செய்வதையே வேலையாகக் கொண்டுள்ள முதலமைச்சர் விஜய், ரீல்ஸ் கிரியேட்டராக இல்லாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். அரசின் தொடர்ச்சியான ஆணவம் அழிவுக்கே வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.





