--- --:--:-- --

12 மணி வரை உதயநிதி மீது கைது நடவடிக்கை கூடாது – ஐகோர்ட் அறிவுறுத்தல்

5

12 மணி வரை உதயநிதி மீது கைது நடவடிக்கை கூடாது – ஐகோர்ட் அறிவுறுத்தல்
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக, தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரைக் கைது செய்ய அவரது நீலாங்கரை வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

 

 

 

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்ற பணிகளில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கில் கைது செய்ய முயற்சிக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர வழக்காக விசாரிக்கக்கோரிய கோரிக்கையை நீதிமன்றம் ஏற்று, இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

 

இந்த நிலையில், பகல் 12 மணி வரை கைது நடவடிக்கை கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தலை அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon