தமிழ்நாட்டின் உரிமைக் குரலுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் – தங்கம் தென்னரசு பதிவு
தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதள பக்கத்தில், “மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் மீது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். உச்சக்கட்ட அடக்குமுறையும், அரசியல் பழிவாங்கும் போக்கும் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே கேள்விக்குறியாக்குகின்றன.
ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசுவோர் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவது ஆட்சியின் பலத்தை காட்டுவதல்ல; மாறாக, அதன் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது. எதிர்க்கட்சியின் குரலை வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் ஒடுக்க முயல்வது ஜனநாயக மரபுகளுக்கும், அரசியல் நாகரிகத்திற்கும் முற்றிலும் எதிரானது. இது ஒரு தலைவருக்கு எதிரான நடவடிக்கை அல்ல; தமிழ்நாட்டின் உரிமைக் குரலுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்.” என்று கூறியிருக்கிறார்.





