இனி யாரைப் பற்றியும் இழிவாகப் பேசக்கூடாது என்பதற்கான எச்சரிக்கை – அமைச்சார் அருண் ராஜ்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு விவகாரத்தில், பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் பெண்களை இழிவாகப் பேசுவதே தவறு என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
அரசியல் மேடைகளில் இனி யாரைப் பற்றியும் இழிவாகப் பேசக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், இக்கையதைக் கண்டித்துப் போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தவர்கள் மீது சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.





