--- --:--:-- --

மது போதையில் காவல் நிலைய வளாகத்தில் அட்டகாசம் செய்த நபர்..!

3

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மது போதையில் மூழ்கி இருந்த நபர் ஒருவர் காவல் நிலைய வளாகத்தில் அட்டகாசம் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

தாராபுரம் காவல் நிலையத்திற்கு சென்ற அந்த நபர் மதுபோதையில் தொல்லை செய்ததால் அவரை வளாகத்தில் இருந்து வெளியேற்றிய காவல்துறையினர் வாயிலை மூடினர். இதனால் ஆத்திரமுற்ற அந்த நபர் சாலையில் கிடந்த கற்களை அவர்கள் மீது வீசியுள்ளனர்.

 

பின்னர் வாயிலைத் திறந்து உள்ளே வந்த மது போதை ஆசாமி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நிற்கமுடியாமல் தள்ளாடிய அந்த நபர் ஒரு கட்டத்தில் ஆபாச வார்த்தைகளை பேச அவரை கையாள முடியாமல் காவல்துறையினர் தடுத்தனர்.

Leave a Reply

Right Menu Icon