--- --:--:-- --

தண்ணீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..!

4

திண்டுக்கல் அருகே பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

 

அங்குள்ள ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையர்களால் தோன்றப்பட்டதாகக் கூறப்படும் பள்ளத்தில் நீர் தேங்கி குளம்போல் இருந்துள்ளது.

 

அண்ணன் மகளான 11 வயது சிறுமி சத்திய பாரதி மற்றும் உறவினர் மகளான 14 வயது சிறுமி பிரியதர்ஷினி ஆகியோர் துணி துவைக்க சென்றபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து அவர்களை காப்பாற்ற ஆழம் தெரியாமல் மூவரும் தத்தளிப்பதைக்கண்ட சக்திவேலின் மனைவி அர்ச்சனாவும் நீரில் இறங்கியுள்ளார். இதையடுத்து நீச்சல் தெரியாமல் நால்வரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Leave a Reply

Right Menu Icon