--- --:--:-- --

ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கொரொனாவில் இருந்து குணமடைந்த நபர்..!

4

2020 ஆம் ஆண்டு கொரொனாவால் பாதிக்கப்பட்ட நபர் 549 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணம் ரோஸ்வெல் டான் ஹெண்டர்.

 

அவருக்கு. 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி செய்யப்பட்டது. அந்த சமயத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்.

 

9 மருத்துவமனைகளில் மொத்தம் 549 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் 549 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த டான் ஹெண்டர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

ஒன்றரை ஆண்டுகள் குடும்பத்தினர் யாரையும் சந்திக்காமல் மருத்துவமனையில் இருந்தபோது தனது குடும்பத்தினரை சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon