கள்ளக்காதலியை கொலை செய்த நபர்..!
கேரளாவில் மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு திருமணம் செய்த இளைஞர் அந்த பெண்ணை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 31 வயதான பிரவீனுக்கு திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளன.
திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் பணிபுரியும் சக ஊழியரான தேவிப்ரியா என்ற இளம் பெண்ணுக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதை அறிந்த பிரவீனின் மனைவி அளித்த புகாரின்பேரில் இளம்பெண்ணை வேலை விட்டு நீக்கிய நிர்வாகம் பிரவீனை திருவண்ணாமலைக்கு மாற்றியது.
உடல் ரீதியாக உறவாக இருந்த தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய இளம்பெண் பிரவீன் உடன் ரகசிய திருமணம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை செல்போன் ஸ்டேட்டஸ் ஆக வைத்த போது திருமணம் அம்பலமானது.
இதனால் ஆத்திரமடைந்த பிரபு கள்ளக்காதலி தேவிபிரியாவின் திருவனந்தபுரம் கடத்தி சென்று கொலை செய்திருக்கிறார் .பின்னர் சரணடைந்த பிரவீன் அளித்த தகவலின் பேரில் தேவிப்பிரியா உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






