மருத்துவமனையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அனுமதி..!
தனியார் மருத்துவமனையில் செவிலியர்கள் உடன் உலக மகளிர் தினத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொண்டாடியுள்ளார். காய்ச்சல், தலைசுற்றல் காரணமாக தனியார் மருத்துவமனையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் தன்னை கவனித்துக் கொள்ளும் செவிலியர்கள் உடன் கலகலப்பாக பேசி மகளிர் தினத்தை கொண்டாடி அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.






