வானில் இருந்து குதித்துவிட்டு பாராசூட்டை திறக்க முடியாமல் தவித்த நபர்..!
வானில் இருந்து குதித்த போது தரையை நெருங்கிய சமயத்தில் பாராசூட்டை திறக்க முடியாமல் தவித்த இளைஞருக்கு ஸ்கை டைவிங் பயிற்சியாளர் கடவுளைப் போல வந்து உதவிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்கை டைவிங் மற்றும் பாராசூட்டில் பறப்பது என்பது வெளிநாடுகளில் மிகவும் பிரபலமானது. வானத்தில் இருந்து குதிக்கும் போது ஏற்படும் அனுபவத்தை பெறுவதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் ஸ்கை டைவிங் செய்கிறார்கள்.
ஸ்கை டைவிங் செய்பவர்கள் விமானத்திலிருந்து குதித்து தரையில் நெருங்கியதும் பேராஷூட் திறந்து பாதுகாப்பாக இறங்குவர். தக்க பயிற்சியாளர் உதவியுடன் தான் ஸ்கை டைவிங் செய்ய முடியும். இரவில் பாராசூட்டை திறக்க முடியாமல் தரையில் விழுந்து அசம்பாவிதங்களும் நடந்திருக்கின்றன.
இந்த சூழலில்தான் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஸ்கை டைவிங் பயிற்சியாளர் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஒருவர் வானத்திலிருந்து குதிக்கிறார். தரையை நெருங்கும் போது அவர் பாராசூட்டை பிரிக்க முயற்சி செய்ய அவரால் முடியவில்லை. அந்தரத்தில் மிதந்தபடி அவர் தவிக்கிறார்.
அப்போது கடவுளைப் போலவே அவரது பயிற்சியாளர் அந்தரத்தில் பறந்தபடி இளைஞருடன் சென்று பாராசூட்டை திறந்து விடுகிறார். அதன்பிறகு அந்த இளைஞரும் பயிற்சியாளரும் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளனர்.






