தற்கொலை செய்து கொண்ட நபர் அதன் காரணம் குறித்து இறப்பிற்கு முன் வீடியோ பதிவு செய்துள்ளார்!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் இடப் பிரச்சினை தொடர்பாக வீடியோ பேசி வெளியிட்டுவிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இரும்புலி பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் கண்டெய்னர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியரான கண்ணன் மற்றும் அவரது சகோதரர் கண்ணியப்பன் ஆகியோர் வீட்டுமனை பிரச்சினை தொடர்பாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஹரிகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இறப்பதற்கு முன்பு அவர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் கண்ணனும், கன்னியப்பனும் தங்களது இடத்தை அபகரிக்க முயற்சித்ததாக தெரிவித்திருக்கிறார்.






