பெற்றோரை இழந்த 17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த நபர்..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெற்றோரை இழந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிறுமி பெற்றோரை இழந்து சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்தார்.
அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான நாகராஜ் என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி திருமணம் செய்துள்ளார். பொதுமக்கள் மூலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்கும் விவகாரம் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நாகராஜை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.





