--- --:--:-- --

பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்டவர் அடித்துக் கொலை..!

6

கோவை மாவட்டம் சூலூரில் உணவகத்தில் பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்டவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்த ஆரோக்கியராஜ். அவர் கருப்பசாமி என்பவரது உணவகத்தில் பரோட்டா பார்சல் வழங்கியுள்ளார்.

 

அப்போது கூடுதலாக குருமா கேட்டதால் உணவக உரிமையாளர் கருப்பசாமி, பணியாளர் கரிகாலன் முத்து ஆகியோர் தகாத வார்த்தையில் பேசியிருக்கிறார்கள். வாக்குவாதம் முற்றியதில் மூவரும் ஆரோக்கியராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த ஆரோக்கியராஜ் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

 

இதனால் முத்துகவுண்டன்புதுர் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் கருப்பசாமிக்கும் அவருக்கும் முன்விரோதம் இருந்ததால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

கருப்பசாமி கரிகாலனை காவல்துறையினர் கைது செய்தனர். தப்பியோட முயன்றவரை சரமாரியாக தாக்கினார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon