--- --:--:-- --

நாடு முழுவதும் வரும் 18ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்..!

5

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் வரும் 18ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளார். மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர் .போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர் தோல்வியில் முடிந்து வருகின்றன.

 

வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகளும் உறுதியாக உள்ளனர்.

 

விவசாயிகள் போராட்டம் இன்று 78வது நாளாக எட்டும் நிலையில் அடுத்தகட்ட போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர். வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் 12:00 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று சம்யுக்தா கிசான் மோச்சா சங்கத்தின் தக்ஷன் தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் போராட்டங்களுக்கு மத்தியில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்குவது நோக்கமல்ல என்று பாரதிய ஜனதா கட்சி யூனியன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அரசு அதன் பணியை செய்ய வேண்டும் என்றும் சட்டங்களை திரும்பப் பெறுவதுடன் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon