--- --:--:-- --

பரந்தூர் விமான நிலையப் பணிகளை கைவிட முடிவு..!

5

ரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என போராடிய மக்களுடன் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களுக்கு மேலாக இந்த திட்டத்திற்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு, இந்த விவசாய நிலங்களை பாதுகாக்க இந்த மக்கள் போராடி வருகிறார்கள். விக்கிரவாண்டியில் அக்டோபர் 2024 நடந்த பொதுக் கூட்டத்திலேயே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறேன்.

 

 

தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கான விமான நிலையங்களின் பங்கு பற்றி நான் நன்கு அறிவேன். அதற்கான என்னுடைய முழு ஆதரவும் உண்டு. ஆனால் பரந்தூரில் இந்த திட்டம் அமையக்கூடாது. இந்த திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையிலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தேன்.

 

 

மக்கள் மத்தியிலே நான் அன்று அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடமும், துறை வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon