‘கர்ஜனை’கஜேந்திரனின் மறுபக்கம்! பெண்கள் விஷயத்தில் சபலம்… ‘வீக்னஸ்’ மறைக்க புஜபலம்!
வாகனச்சோதனை, பணியில் கண்டிப்பு என்று வெளியே புஜபலம் காட்டி வேஷம் போட்டுக் கொண்டு, இன்னொரு புறம் பெண்களுக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட அத்துமீறல்களில் ஈடுபடுவதாக, திருப்பாலைக்குடி காவல் நிலைய ஆய்வாளர் கஜேந்திரன் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பொதுமக்களுக்கு பாதுப்பை தருவதும், சட்டம் ஒழுங்கை பேணி காப்பதும் காவல்துறையினரின் தலையாய கடமை. தவறு புரியும் குடிமகன் மீது கையை வைக்கும் உரிமையும் காவல்துறையினருக்கு மட்டுமே உள்ளது. இப்பணியை பலரும் புனிதமாகக்கருதி, தங்கள் கடமையை செய்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை ஈட்டி வருகின்றனர். கடமையும் அர்ப்பணிப்பு உணர்வோடும் பல காவல்துறை அதிகாரிகள் பணியாற்றி, அந்த துறைக்கே பெருமை சேர்த்துள்ளனர்.
ஆனால், இன்னும் சிலரோ, காக்கி உடைக்கே உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, பல அத்துமீறகளை செய்து களங்கப்படுத்தி வருகின்றனர். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று சொல்லிக் கொண்டாலும், இதுபோன்ற நபர்களால், பொதுமக்களை பொருத்தவரை காவல்துறையினரை வில்லனாகவே தெரிகின்றனர். இதற்கு சரியான உதாரணமாக உள்ளார், இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலைய ஆய்வாளர் கஜேந்திரன்.
திருப்பாலைக்குடி காவல் நிலைய ஆய்வாளராக கஜேந்திரன் பொறுப்பேற்று ஏறத்தாழ ஆறு மாதங்களே ஆகிறது; அதற்கு முன்பாக, பரமக்குடி, சிக்கல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்துள்ளார். அதன் பிறகு, திருப்பாலைக்குடி காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றார்.
பார்ப்பதற்கு, ‘என் கடமை’ எம்.ஜி.ஆர், ‘தங்கப்பதக்கம்’ சிவாஜியை போல் கம்பீரமான தோற்றம், மிடுக்கான நடை, பார்வையில் கண்டிப்பு என தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டுள்ளார் கஜேந்திரன். இதனால், மிகவும் கண்டிப்பான, நேர்மையான பேர்வழி என்று பொதுமக்களின் வெளிப்பார்வைக்கு தெரியும். அதற்கேற்ப வானகச் சோதனை, தீவிர ரோந்து, கண்காணிப்பு என்று கஜேந்திரனின் ‘சுறுசுறுப்பை’ பார்த்து, ஆரம்பத்தில், எல்லோரும் அசத்து போனார்கள்- ஒருசிலர் அரண்டு போனார்கள்.
நேர்மையாக இருக்கும் காவல் அதிகாரிகளே காட்டாத கண்டிப்பை இவர் காட்டுகிறாரே என்று, இராமநாதபுரம் மாவட்ட மூத்த பத்திரிகையாளர்கள் ஒருசிலருக்கு, சந்தேகம் பொறி தட்டியது. கஜேந்திரனின் கர்ஜனைக்கு பின்னால் ஏதோ விஷயம் இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை தீவிரமாக விசாரிக்க தொடங்கினார். எதிர்பார்த்ததுபோலவே, இந்த விசாரணையில் கஜேந்திரனின் அசிங்கமான இன்னொரு முகம் தெரிய வந்துள்ளதாக, இராமநாதபுரம் மாவட்ட பத்திரிகையாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
பெண்கள் விஷயத்திலும் படு “வீக்”
வாகனச் சோதனை என்று இறங்கிவிட்டாலே, கஜேந்திரன் வசூல் வேடையில் இறங்கிவிட்டார் என்றுதான் அர்த்தமாம்; அப்பாவிகளை அச்சுறுத்தி பணம் வசூலிப்பது மட்டுமின்றி, பெண்கள் விஷயத்திலும் படு “வீக்” என்பதும், இவரை பற்றி அறிந்தவர்கள் நம்மிடம் கிசுகிசுத்தனர். பெண்கள் விஷயத்தில் சபலிஸ்ட்; இதனால் ஏற்பட்ட சிக்கல் காவல் நிலையத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுதான், திருப்பாலைக்குடிக்கு அவர் மாற்றப்பட்டதும் தெரிய வந்தது.
சிக்கல் ஸ்டேஷனில் இருந்தபோது, எஸ்பி கான்ஸ்டபிள் ஒருவரது மனைவி மீது, கஜேந்திரனின் காமப்பார்வை பட்டுள்ளது. அவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தனிமையில் இனிமையை காணத் தொடங்கினார். இது, சம்மந்தப்பட்ட காண்ஸ்டபிளுக்கு தெரியவர, இருவரும் தனிமையில் இருந்தபோது அறையை வெளிப்பக்கமாக பூட்டி, கையும் களவுமாக பிடித்தார்.
கஜேந்திரனின் காமப்பசியை நன்கு அறிந்து வைத்திருந்த அவரது மனைவி, கணவரை தனியாக விட்டால், தனக்கு ஆபத்தாக முடியும் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, தனது சொந்த ஊரை காலி செய்துவிட்டு கணவர் குடியிருக்கும் குவார்ட்டர்ஸுக்கே குடிபெயர்ந்தார். அத்துடன் நிற்காமல், ஸ்டேஷனிலும் ‘கைவரிசை’ காட்டிவிட்டால் என்ன செய்வது என்பதற்காக, அவ்வபோது கஜேந்திரன் இருக்கும் ஸ்டேஷனுக்கே வந்து, மனைவி நோட்டம் விட்டும் செல்வாராம்.
தொடர்ந்து இதுபோன்ற பாலியல் சர்ச்சையில் சிக்கிய காவல் ஆய்வாளர் கஜேந்திரன் விவகாரம், அப்போது எஸ்.பி. ஆக இருந்த மயில்வாகனன் வரை, பஞ்சாயத்து போயிருக்கிறது. விசாரணைக்கு பிறகு கஜேந்திரன், பரமக்குடிக்கு மாற்றப்பட்டார். ருசி கண்ட பூனை சும்மா இருக்காது; அங்கும் கஜேந்திரனின் லீலைகள் தொடர்ந்ததாக கூறுகிறார்கள். அதன் பிறகே, திருப்பாலைக்குடி ஸ்டேஷனுக்கு கஜேந்திரன் மாற்றப்பட்டார்.
இங்கும்கூட கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது போல் காட்டிக் கொண்டு, வழக்கமான சேட்டைகளில் இறங்கிவிடுவதாக, பொதுமக்கள் பலரும் குமுறுகின்றனர். இரு வாரங்களுக்கு முன்பு கூட, பெண் ஒருவரை காணவில்லை என்று அளிக்கப்பட்ட புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
கஜேந்திரனுடன் காவல்துறையில் பணியில் சேர்ந்த பலரும் டிஎஸ்பி என்று பதவி உயர்வு பெற்று சென்றுவிட, கஜேந்திரனோ பெண்கள் விஷயத்தில் வீக் ஆக இருந்து, தண்டனைகளுக்கு உள்ளாகி, இன்னமும் இன்ஸ்பெக்டராகவே இருக்கிறார். காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் கஜேந்திரன் போன்ற ஒருசில கறுப்பாடுகளால், ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரிய அவப்பெயர் ஏற்படுகிறது.
எனவே, கஜேந்திரன் விவகாரத்தில் பெயரளவிற்கு பணியிட மாற்றம் என்பது போன்ற கண்துடைப்பு நடவடிக்கையோடு நின்றுவிடாமல், தீவிர விசாரணை நடத்தி, வழக்குப்பதிந்து உரிய தண்டனை பெற்றுத் தந்தால் மட்டுமே, பொதுமக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை வரும். காவல்துறை அதிகாரிகள் செய்வார்களா?

பாலியல் புகாருக்கு ஆளான
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்!
பெரம்பலூரை சேர்ந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, தமிழக சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றபட்டுள்ளார்.
முதல்வர் பழனிசாமி, கடந்த 21ம் தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அவரது பாதுகாப்புக்கு பணியின்போது பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் தவறாக நடக்க முயன்றதாக உயர் போலீஸ் அதிகாரியான சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலியே பயிரை மேய்வதா என்று, இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின், ‘பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலையை பார்த்து அத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் தலைகுனிய வேண்டும் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்ததை அடுத்து, அவர்மீது விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணைக் குழு அமைத்துள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவில் சீமா அகர்வால், ஐ.ஜி அருண், டிஐஜி சாமூண்டிஸ்வரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பாலியல் புகாரில் சிக்கிய நிலையில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.






