கொரொனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சரிந்துள்ளது..!
இந்தியாவில் கொரொனா வைரஸ் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் முதல் முறையாக 9 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த தகவலை தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை புதிதாக கண்டறியப்பட்ட எண்ணிக்கையை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது வாரமாக அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கொரொனா சோதனைகளை அதிகரித்தல், தொற்று இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிதல், விரைவில் சிகிச்சை அளித்தல் ஆகிய தடுப்பு உத்திகளை சிறப்பாக செயல்படுத்துவது தொற்று எண்ணிக்கை குறையக் காரணம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.






