--- --:--:-- --

விண்கலம் அனுப்பி வைத்த மண்மாதிரி..! விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி..!

11

ரெக்யூ குறுங் கோளிலிருந்து ஹையர் டீஸார் 2 விண்கலம் சேகரித்து அனுப்பிய மண்  தாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகம் என்பதால் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பூமியில் இருந்து 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள குறுங்கோளுக்கு ஆறு வருட பயணம் செய்த விண்கலம் மண் மாதிரிகள் அடங்கிய சிறு பெட்டகத்தை பூமிக்கு அனுப்பியது.

 

ஆஸ்திரேலிய பாலைவனத்திலிருந்து இந்த பெட்டகம் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு திறக்கப்பட்டது. அதிலுள்ள மண் காபி கொட்டையை அரைத்தது போல உள்ளது. அதில் உள்ள கனிமங்களிலிருந்து வெளிவரும் வாயுவை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

 

இந்த மண் மாதிரியிலிருந்து கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அண்டம் எப்படி இருந்தது. பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு அதற்கும் தொடர்பு உள்ளதா என்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon