நகை வாங்குவது போல் வந்து திருட்டில் ஈடுபட்ட 25 வயது இளம்பெண்..!
சென்னையில் ஜோய் அலுக்காசில் நகை வாங்குவது போல் வந்து திருட்டில் ஈடுபட்ட 25 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். தியாகராயநகர் உஸ்மான் சாலையில் கடந்த மாதம் 1ஆம் தேதி வந்த இளம்பெண் நகை வாங்குவது போல் பல மாடல் நகைகளை ஒவ்வொன்றாக நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அந்த பெண் சென்றபோது 4 சவரன் கம்மல் தோடு காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் பரங்கிமலை பகுதியை சேர்ந்த 25 வயது நிரம்பிய பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த பெண் நகைகளை திருடி இரண்டு முறை கைது செய்யப்பட்டவர் என போலீசார் கூறியுள்ளனர்.







