--- --:--:-- --

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

1

னமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நேற்று காலை முதல் மிக கனமழை பெய்யத் துவங்கியுள்ளது. நேற்று பிற்பகல் மட்டும் நான்கு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக புதுச்சேரி நகர் முழுவதும் பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

 

இந்த நிலையில் இந்த மழையானது மீண்டும் நேற்று இரவு தொடங்கி விடிய பெய்த மழையானது கொட்டி தீர்த்து உள்ளது. தொடர்ந்து தற்போதும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து நாராயணசாமி விடுமுறை அறிவித்துள்ளார்.

 

இன்றைய தினம் கல்லூரிகள் திறப்பதாக இருந்தது. அதற்கான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. தற்போது பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

நேற்று பெய்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதை அப்புறப்படுத்தும் பணிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

மழையின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிவர் மற்றும் புயல், புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon