ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பூனைக்குட்டி புலியாக மாறிய சம்பவம்..!
பூனைக் குட்டியை வளர்க்க ஆசைப்பட்டு புலிக்குட்டியை வாங்கியதால் ஃபிரெஞ்சு தம்பதி ஒன்று போலீஸ் விசாரணையை எதிர்கொண்டுள்ளது. நார்மெண்டியை சேர்ந்த தம்பதி ஆன்லைன் விளம்பரம் ஏற்படுத்திய ஆர்வத்தால் சப்னா பூனை என கருதி மூன்று வயது குட்டி ஒன்றை இந்திய மதிப்பில் 5 லட்ச ரூபாய் கொடுத்து 2018 ஆம் ஆண்டு வாங்கினர்.
அதன் உருவ அமைப்பில் ஏற்பட்ட சந்தேகத்தால் போலீசிற்கு தகவல் அளித்த போது தான் அது இந்தோனேஷியாவை சேர்ந்த சுமத்ரான் புலி என்பது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு வருட விசாரணைக்கு பிறகு பாதுகாக்கப்பட்ட விலங்கை கடத்தியதாக 9 பேருடன் தம்பதி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.






