பாலியல் வன்கொடுமை அதிகரிப்பதால் உயர்நீதிமன்றம் தானாக வந்து விசாரிக்க கோரிக்கை..!
கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகள் சிறுவர்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இந்த முறைகேட்டை வைத்தார். தமிழகத்தில் தொடர்ச்சியாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து வருவதாகவும் 2012 ஆம் ஆண்டு கொண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில் அதனை முறையாக நடைமுறைப் படுத்தாததே சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் எனவும் கருதப்படுவதாக கூறியவர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகள் சிறுவர்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.






