நண்பரையும், மனைவியையும் மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கணவர்..!
ராஜஸ்தானில் பந்த்ரா பகுதியில் மனைவியை மரத்தில் கட்டி வைத்து கம்பால் தாக்கிய கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தனது நண்பருடன் மனைவியை கணவரே மரத்தில் கட்டி வைத்து இரக்கமில்லாமல் தாக்கிய நிலையில் அவரது நண்பரையும் மரத்தில் கட்டி வைத்து உறவினர்கள் விசாரணை நடத்தினர்.
சுமார் 7 மணி நேரம் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பெண் வலியால் அலறி துடித்த காட்சிகள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்த டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.





