பாட்டியை கொலை செய்து வீடியோ எடுத்து அனுப்பிய ஹமாஸ் படையினர்.. கதறிய இளம் பெண்..!
காசா பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக ஹமாஸ் படை குழுவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 5 நாட்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.
தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் தொடர்ந்து முதியவர்கள் வரை பலரும் கொடூரமாக இரு தரப்பிலும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தனது பாட்டி கொலை செய்யப்பட்டது குறித்து கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலிய பெண் இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றை பார்த்தேன். கனவில் கூட நினைத்து பார்க்க முடியாதபடி எனது பாட்டியை தாக்கிய ஹமாஸ் படையினர் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.
வீடு முழுவதும் ரத்தமாக இருக்க அங்கே அவரது பாட்டி உயிரற்று விழுந்து கிடக்கிறார். அவரை கொலை செய்த ஹமாஸ் படை குழுவினர் அதனை பாட்டியின் போனிலேயே வீடியோ எடுத்து அவரது பேஸ்புக் பக்கத்திலேயே பதிவிட்டுள்ளனர்.





