ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான இன்ஜினியர்.. விபரீத முடிவு..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணபதி பாளையத்தைச் சேர்ந்த பொறியாளர் கவின் குமார் என்பவர் அடிக்கடி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விளையாடுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதற்காக மூன்று லட்ச ரூபாய் கடன் வாங்கி பந்தயம் கட்டி விளையாடியதாகவும் பந்தயத்தில் அந்த பணத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக பணத்தை இழந்த சோகத்தில் இருந்த கவின்குமார் நேற்று முன்தினம் இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





