--- --:--:-- --

முகக் கவசம், சானிட்டைசர் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது..!

6

முக கவசம் மற்றும் சானிடைசர்கள் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த பொருள்கள் சந்தையில் போது அளவில் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் லீலா நந்தன் தெரிவித்தார்.

 

முன்னதாக கடந்த மார்ச் 13ஆம் தேதி முகக் கவசங்கள் மற்றும் சானிடைசர் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இதன் மூலம் அவற்றின் பதுக்கல் மற்றும் விலை ஏற்றம் தடுக்கப்பட்டது. தற்போது இவை தாராளமாக கிடைப்பதால் தனது முந்தைய முடிவை நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் மாற்றிக்கொண்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon