--- --:--:-- --

திருச்சியில் எறிந்த நிலையில் எடுக்கப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைப்பு..!

8

திருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருபவரின் 14 வயது மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

 

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணாமல் பெற்றோர் தேடிய நிலையில் முட்புதர்களுக்கு இடையே எரிந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது, உடலின் அருகே தீப்பெட்டி, மண்ணெண்ணெய் கேன் இருந்த போதிலும் அங்கு இருந்ததற்கான அடையாளங்கள் இல்லை. எனவே சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து 11 தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் விசாரணையை முடுக்கி உள்ளனர். இதனிடையே திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல் மூன்று மருத்துவர்கள் குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டது.

 

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சில ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராம் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு சிறுமியின் மரணம் குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும் என தெரிவித்தார். இதனிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் சிறுமியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon