--- --:--:-- --

பனிப்பாறைகள் ரத்த நிறமாக காட்சியளிக்கும் அதிசயம்

11

அண்டார்டிகாவில் அரைகுறையாக பழுத்த தர்பூசணி பழம் போல காட்சியளிக்கும் பனிப்பாறைகள் பருவநிலை மாற்றத்தின் அபாயத்தை உணர்த்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

பனிப்பாறைகள் ரத்த சிவப்பு நிறத்துடன் தோற்றமளிக்கும் வியப்பூட்டும் காட்சியைப் படம் பிடித்த புக்னைனின் வெர்நாஸ்கி ஆராய்ச்சி தளத்தில் உள்ள விஞ்ஞானிகள் கிளமிடோமொனாஸ் என்ற பாசியை இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

 

இந்த பச்சை நிற பாசி முதிர்ச்சியடைந்து பனிப்பாறைகள் படியும் போது அதிக மற்றும் தட்பவெப்ப நிலையை சமாளிக்க மின்கடத்தா செல் சுவரையும் சிவப்புநிற கரோட்டீன் அடுக்குகளையும் உருவாக்குவதாக கூறப்படுகிறது. இதனாலேயே பனிப்பாறைகள் இளம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.

Leave a Reply

Right Menu Icon