குத்தகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பல்..!
சென்னையில் குத்தகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரொனா காலத்திலும் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றுதான் குத்தகைக்கு வீடு தேடி அவர்களை குறி வைத்து நடந்த மோசடி.
அதுகுறித்து வீடியோ கால் மூலம் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் கிழக்கு தாம்பரத்தில் செயல்பட்டு வந்த சஞ்சயன் புரோபர்டீஸ் என்ற நிறுவனம் ஓஎல்எக்ஸ், நோ புரோக்கர் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்த நேரம் காலியாக உள்ள வீடுகளை வாடகைக்கு பிடிக்கும் இந்த நிறுவனத்தினர் பின்னர் தாங்களே உரிமையாளர் போல் குறிப்பிட்ட தளங்களில் விளம்பரம் செய்துள்ளனர். அதை பார்த்து தொடர்பு கொள்பவர்களிடம் வீட்டை பொருத்து 4 முதல் 12 லட்சம் ரூபாய் வரை குத்தகைப் பணத்தை வசூலித்துக் கொண்டு தப்பி விடுவார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சன்சைன் பிரோபெர்டீஸ் நிறுவனத்தை சேர்ந்த பிரகாஷ் காயத்ரி மற்றும் விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பல் 2 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.






