--- --:--:-- --

சூரரை போற்று திரைப்படத்தில் வெளியீட்டு தொகையிலிருந்து ரூ 5 கோடி பகிர்ந்தளிப்பு..!

9.2

சூரரை போற்று திரைப்பட வெளியீட்டு தொகையிலிருந்து முதல்கட்டமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம் முப்பதாம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வெளியாகிறது.

 

திரையரங்குகளுக்கு பதில் ஓ‌டி‌டியில் ரிலீஸ் ஆவதால் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தொகையில் 5 கோடி ரூபாயை பகிர்ந்து அளிக்க இருப்பதாக சூர்யா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் முதல் கட்டமாக திரையுலக தொழிலாளர்கள் அமைப்பான பெப்சிக்கு ஒரு கோடியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாயும், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாயும் காசோலைகள் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon