--- --:--:-- --

கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டிய குற்றவாளி..!

11

ன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்ய சென்ற போது மனைவி, குழந்தைகளுடன் கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல நாயக்கன் கோண பகுதியை சேர்ந்த அந்த நபர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அந்தோணி கஞ்சா விநியோகம் செய்வதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அவரை கைது செய்து சென்றனர்.

 

போலீசார் வருவதை அறிந்து வீட்டின் கதவுகளை மூடிக்கொண்டு அந்தோணி தான் திருந்தி வாழ்வதாகவும் போலீசார் தன்னை மிரட்டுவதாகவும் கூறி இரண்டு கேஸ் சிலிண்டர்களை வைத்துக் கொண்டு தனது இரண்டு மனைவிகள் மூன்று குழந்தைகளோடு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.

 

அந்தோணியின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வேறுவழியின்றி தற்காலிகமாக கைது நடவடிக்கையை கைவிட்டு போலீசார் அங்கிருந்து சென்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon