பெற்ற மகளை விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய தந்தை..!
பெங்களூருவில் பெட்சமங்களை மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ஆடை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் வென்ற ஆஷா கருத்து வேறுபாடு காரணமாக காதல் கணவரை பிரிந்து பெற்றோருடன் இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தார்.
பெற்றோரை மதிக்காமல் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட ஆயிஷா வயதானவர்கள் என்றும் பாராமல் அவர்களை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் தந்தை ரமேஷ் உடன் சண்டையிட்டுவிட்டு இரவில் உறங்கச் சென்ற ஆஷாவை அவர் விறகு கட்டையால் சரமாரியாக அடித்து கொலை செய்தார்.
ஆஷா தற்கொலை செய்து கொண்டதாக ரமேஷ் தெரிவித்த நிலையில் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.





