பிரதமர் ஆஃபீஸ்க்கு சென்ற லேப்டாப்பில் கிடந்த ஆபாச வீடியோக்கள்..!
பிரதமர் அலுவலர் ஈமெயிலுக்கு அவதூறான கருத்துக்களை அனுப்பியதாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தஞ்சை சேர்ந்த நபரின் லேப்டாப்பை ஆய்வு செய்த பொழுது சிறுமிகளை ஆபாசமாக வீடியோக்கள் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பூண்டி தோப்பு பகுதி சேர்ந்த விக்டர் ஜீன்ஸ் ராஜா என்ற அந்த நபர் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறார். வெளியில் தன்னை இயற்கை மேலான ஆர்வலர் சமூக ஆர்வலர் என காட்டிக்கொள்ளும் விக்டர் ஜீன்ஸ் ராஜாவின் லேப்டாப் சர்வரை ஆய்வு செய்த பொழுது அதில் ஏராளமான சிறுமிகளின் ஆபாச படங்கள் கொட்டிக் கிடந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி குறித்தும், தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வந்துள்ளார். இணைய வழித்தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ அதிகாரிகள் விக்டர் ஜீன்ஸ் ராஜாவை கைது செய்துள்ளனர்.





