மருமகனுக்கு மாமனார் கொடுத்த சீர்வரிசை..!
புதுச்சேரியில் மருமகனுக்கு மாமனார் கொடுத்த சீர்வரிசை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனா மாவட்டத்தை சேர்ந்த பவன்குமாருக்கும், ஆந்திராவின் ராஜமுந்திரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தனது மகளை மணமுடித்து வைத்திருக்கிறார்.
தமிழர்களுக்கு ஆடி போன்று ஆந்திர மக்கள் தெலுங்கு மாதமான ஆஷாதமாதம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் பவன்குமாருக்கு அவரது மாமனார் ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கோழிகள், ஆயிரம் கிலோ காய்கறிகளை சீர்வரிசை கொடுத்து அசத்தியுள்ளார்.
வண்டி வண்டியாக வந்திறங்கிய சீர்வரிசையை அந்த பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.






