புதிய சாதனை படைத்த மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல்..!
மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 22.5 கோடி பேரால் பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. விஜய், மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
படம் வெளியாவதற்கு முன்னரே இந்த திரைப்படத்தில் வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எல்லாம் ஒலித்த பாடலுக்கு ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் நடனமாடிய வெளியிட்டனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு வெளிவந்த பாடல்களிலேயே 225 லட்சம் பேர் வரை பார்த்த பாடலாக உருவாக்கியுள்ளது. இதையடுத்து ட்விட்டர் தளத்தில் வாத்தி கம்மிங் இருந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




