--- --:--:-- --

வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த கொட்டகையை உடைத்த யானைகள்..!

5

கோவை கதிர் நாயக்கன்பாளையத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த தகரக் கொட்டகையை யானைகள் தகர்த்து எறிந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், கதிர் நாயக்கன்பாளையம் பகுதிக்குள் நுழைந்த மூன்று யானை அங்கு கட்டட தொழிலாளர்கள் தங்கியுள்ள தகர செட்டுக்குள் நுழைந்தன.

 

அங்கிருந்து அரிசியை தேடிய காட்டி யானைகளை கண்ட தொழிலாளர்கள் கொட்டகைக்குள்ளேயே பதுங்கினர். இதனை கண்ட எதிர்வீட்டார் வட மாநில தொழிலாளர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியே வரும்படி அறிவுறுத்தினர்.

 

இதனை கவனித்த இருவர் மட்டும் தகர செட்டுக்குள் இருந்து வெளியே ஓடினார். இதனை பார்த்த யானை ஒன்று அவரை தாக்க முயன்றது. எனினும் அவர் வேகமாக ஓடி அங்கிருந்த வீட்டிற்குள் நுழைந்தார். இந்த காட்சிகளை அண்டை வீட்டார் வீடியோவாக பதிவு செய்தனர்.

 

இந்த நிகழ்வால் அச்சம் அடைந்த அந்த பகுதி மக்கள் அண்மைக்காலமாக இந்த மூன்று யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வந்து அரிசி சாப்பிடுவதாக கூறுகின்றனர். எனினும் வனத்துறையினர் யானைகளை வனத்திற்குள் விரட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Right Menu Icon