திமுக அமைப்பு மாற்றம்: மாவட்ட செயலர்கள் எண்ணிக்கை உயர்வு, இளைஞர்கள்–பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க திட்டம்
சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சியில் அமைப்புரீதியான மாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமை முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள 78 மாவட்ட செயலர்களின் எண்ணிக்கையை 115 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்ட செயலரின் கீழ் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 2 முதல் 4 ஆகக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், கட்சிப் பதவிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






