சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் சென்ற வாகன ஓட்டி.. விபத்தில் சிக்கி பலி..!
கோயம்புத்தூர் கொடிசியா அருகே வேகத்தடை இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் நிலை தடுமாறி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். கொடிசியா அருகே உள்ள தனியார் பள்ளியின் முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
வர்ணம் பூசாமல் வேகத்தடை இருப்பதால் அங்கு வேகத்தடை இருப்பது தெரியவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று இரவு 9:30 அவர் வந்த பொழுது வேகத்தடை இருப்பது தெரியாமல் வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.





