ஓடும் பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு.. தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அச்சம்.!
திருச்சியில் அரசு பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தார். சாத்திரம் பேருந்து நிலையத்தை இருந்து 7 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து போது ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே பேருந்தை நிறுத்த முயற்சித்தும் அது முடியாமல் சாலையின் ஒருபுறத்தில் இருந்த கடைகளில் மோதி நின்றது. ஓட்டுனரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்துவிட்டதாகவும் பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





