google மேப் சொன்ன பாதையால் போய் மாட்டிக்கொண்ட ஓட்டுநர்..!
நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுற்றுலா வந்த கர்நாடக மாநில இளைஞர்கள் கூகுள் மேப் காட்டிய பாதையை நம்பி சென்றதில் செங்குத்தான படிக்கட்டுகளில் தங்களது காரை ஓட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
செங்குத்தான படிக்கட்டுகள் இருப்பதை பார்த்து அந்த கார் ஓட்டுநர் காரை சாதுரியமாக படிக்கட்டுகளில் நிறுத்தியதால் காரில் இருந்து இறங்கி என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்தனர்.
அப்பகுதி வாசிகளும் பிற சுற்றுலா பயணிகளும் ஒன்று சேர்ந்து படிக்கட்டின் பாறை துண்டுகளை அடுக்கி வைத்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காரை தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர்.





