லிப்டில் வைத்து இளைஞரை கடித்த நாய்..!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பெண் ஒருவர் கையில் பிடித்து வைத்திருந்த நாய் லிப்டில் வைத்து சிறுவனைக் கடித்தது. இதை அந்த பெண் கண்டும் காணாததுபோல் வேடிக்கை பார்த்த காட்சி வெளியாகியது. இதையடுத்து அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது நொய்டாவில் பதிவான அதே போன்ற இன்னொரு வீடியோ வெளியாகியுள்ளது.
அங்கு லிப்டில் வெளியேறும் பகுதி அருகே இளைஞர் நின்று கொண்டிருந்தார். அதை பிடித்து நின்ற இளைஞர் பிடித்து வைத்திருந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை கடிக்க பாய்ந்த காட்சியும் அதே இடத்தில் இளைஞர் கீழே விழும் காட்சியும் பதிவாகி உள்ளது.





