நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி விபத்துக்குள்ளான ஆட்டோ..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சாலையில் குறுக்கே நாய் வந்ததால் ஆட்டோ விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ நிலை தடுமாறி பேட்டை பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் குறுக்கே நாய் வந்துள்ளது. இதனால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோ நிலை தடுமாறி வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்த இரண்டு பேர் மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் ஆட்டோவுக்கு அடியில் சிக்கிய ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். மேலும் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.





