--- --:--:-- --

பாஜக தலைவர் மீது பாலியல் புகார்! கதறி அழும் பெண் நிர்வாகியின் ஆடியோ… டேக் இட் ஈஸி என்ற ’கூல்’ செய்யும் தலைவர்..!

2352915f-04e6-4f54-bd94-2dbe0b3ed21f

பாஜக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி ஒருவர், பாஜக மூத்த தலைவர் மீது பாலியல் புகார் தெரிவித்து கடிதம் எழுதியது போன்ற புகைப்படம், கதறி அழுது புலம்பும் அந்த பெண்ணின் ஆடியோ ஆகின, சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமித்ஷா சென்னை வந்திருக்கும் நேரத்தில் இந்த விவகாரம் வெடித்திருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவர், பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்டம் மகளிரணி பொதுச்செயலாளராக உள்ளார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.ஏ.டி. கலிவரதன் மீது, பாலியல் புகார் தெரிவித்து, காயத்ரி கதறி அழுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிய அதிர வைத்துள்ளது.

 

அந்த ஆடியோவில், தனக்கு நியாயம் வேண்டுமென்று, அந்த பெண் கேட்டு கதறி அழுகிறார். புகாருக்குள்ளான கலிவரதன், அந்த பெண்ணை சமாதானம் செய்வது போல் உள்ளது. இந்த ஆடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

 

அந்த ஆடியோவில், “ வயிறு பத்திகிட்டு எரியுது, நீ நாசமா போயிடுவ” என்று பெண் அழுதபடி பேசுவதாக தொடங்குகிறது. அந்த தலைவரோ, “ஏன்டி இப்படி அழுவுற, தேவையில்லாததை பேசிகிட்டு இருக்காதே. ஒழுங்கா இருக்கிற கட்சி வேலையை மட்டும் கவனி. அது போதும், மத்ததெல்லாம் தானா வரும்” எனக்கூறி சமாதானம் செய்கிறார்.

 

“நான் எங்கேயும் ஓடிவிட மாட்டேன். பழைய ஆளு நான் இல்லை. டேக் இட் ஈசி நான் யார்கிட்டயும் படுத்துக்க மாட்டேன். கொஞ்ச நாளைக்கு கம்முனு கிட” என்றும் அந்த ஆடியோவில் உரையாடல் செல்கிறது. எந்த சமாதானத்தையும் ஏற்காமல், அந்த பெண் சாபமிட்டவாறே, தேம்பித்தேம்பி அழுது கொண்டிருப்பது, ஆடியோவில் பதிவாகி இருக்கிறது.

தமிழக பாஜக தலைவருடன், விழுப்புரம் மாவட்ட தலைவர் வி.ஏ.டி. கலிவரதன்
தமிழக பாஜக தலைவருடன், விழுப்புரம் மாவட்ட தலைவர் வி.ஏ.டி. கலிவரதன்

அதேபோல், பாஜக தலைவருக்கு விழுப்புரம் மாவட்டம் மகளிரணி பொதுச்செயலாளரின் பெயருள்ள லெட்டர் ஹெட்டில் இருந்து புகார் தெரிவித்திருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. அதில், கலிவரதன் மீது ரூ. 5 லட்சம் மோசடிப் புகாரும், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தீர்த்துவிடுவேன் என்று தமக்கு கொலை மிரட்டலை அவர் விடுத்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த புகார் குறித்து விசாரணை குழு அமைத்து விழுப்புரத்தில் நேரில் விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளியாகும். மாவட்ட தலைவர் (கலிவரதன்) மீது நடவடிக்கை எடுத்து, தனக்கு வாழ்க்கைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த பாலியல் புகார் மற்றும் இந்த ஆடியோ விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கலிவரதன், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க என் மீது வீண்பழி சுமத்தி, களங்கத்தை ஏற்படுத்துவதாக, ஆடியோ வாயிலாக விளக்கம் தந்துள்ளார்.

 

மேலும், பணம் வாங்கிக் கொண்டு பதவி போடவேண்டிய சூழலில் பாரதிய ஜனதா கட்சி இல்லை. பாஜக நேர்மையான கட்சி, ஆன்மீகமான கட்சி, ஒழுக்கமான கட்சி. பாஜக வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காக சூழ்ச்சியில் சிலர் இறங்கியிருக்கிறார்கள். எனவே என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் என்று கலிவரதன் விளக்கம் தந்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் கடிதம்
சமூக வலைதளங்களில் வைரலாகும் கடிதம்

 

அமித்ஷா சென்னை வந்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் ஒருவர் மீதான பாலியல் புகார், பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் பாஜக மேலிடம் அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon